அறிவின் ஆலயம் ******* முன்னோர்கள் தந்திட்ட மூப்பில்லாத் தமிழ்தாயை!! மூவேந்தர் மடிதவழ்ந்து முழுநிலவாய் வந்தவளை!! தேடிவரும் யாவரையும் அன்பாலே அணைப்புடனே!! தேனமுதாம் தமிழ் பருக வைத்தவளை!! பாரதியின் பாட்டினிலும் வள்ளுவனின் ஏட்டினிலும்!! பாரதத்தின் பாங்கினையே பக்குவமாய் பரிமாறி !! அடுத்து வரும் சந்ததியும் அறிந்திடவே!! அறிவின் வழி அமுதமதைப் பருகிடவே!!// மனத்தின்கண் அவள் மடிதனையே அடைந்திடவே!! சொத்தாகத் தந்திடவும் சுயமாக நின்றிடவே!! எமக்கிட்ட பணி அதுவென்றே அறிந்திடவே!! பாடசாலை அமைத்திட்டே பைந்தமிழைப் பரப்பிடவே!! செழிப்புடனே செய்திடுக களிப்புடனே கற்றிடவே!! உயர்வினிலும் உள்ளத்தை நல்லறமாய் வைத்திடவே!! தமிழ் அன்னை அவள் அருளிடுவாள்!! தேன் அமுத மழைப் பொழிந்திடுவாள் !!
தற்போதைய செய்தி
பாடசாலை திறப்பு விழா 05.06.2022
ரிச்சினோ மாநிலத்தில் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆதரவில் புதிய பாடசாலை ஆரம்பம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகச்சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
This Snackbar will close in few seconds!